2021 Review Contest - 4th Prize Winner
(குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய சிறுகதை, நாவல் திறனாய்வுப் போட்டி – 2021 இல் 14 நாடுகளில் இருந்து வந்த பல திறனாய்வுக் கட்டுரைகளில் இருந்து தெரிவாகி நான்காவது பரிசு பெற்ற திறனாய்வுக்கட்டுரை.) குரு அரவிந்தனின் சிறுகதைகளில் நவீன பெண் பாத்திரங்களின் வகிபாகம் பெ. ஸ்ரீகந்தநேசன், யாழ்ப்பாணம், இலங்கை. முகவுரை:- தமிழ்ப் புனைகதை இலக்கிய உலகில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பதித்து வருபவர் குரு அரவிந்தன், ஆவார். இவரது சிறுகதைகளில் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் வெளிப்படுத்தப்படுகின்றன. சிறுகதைகளில் வலம் வரும் பாத்திரங்களில் பெண் பாத்திரங்கள் தனி இடம் பெறுகின்றன. இலக்கிய வடிவங்களில் இன்று வரை மக்களால் அதிகம் வாசிக்கப்பட்டு – நேசிக்கப்பட்டு – வருவது சிறுகதை இலக்கியம் ஆகும். பல்துறை ஆளுமையை உடைய குரு அரவிந்தன் அவர்களின் ஆனந்தவிகடனில் வெளிவந்த, ‘இதுதான் பாசம் என்பதா?’, ‘ரோசக்காரி’, ‘தொடாதே…’, ‘சார்…ஐலவ்யூ’, ஆகிய சிறுகதைகளில் பெண் பாத்திரங்கள் முறையே, திருமணத்தின் போது பெண்ணின் மனநிலை, நவீன யுகத்த...