Posts

Showing posts from December, 2020

Novel - Urunkumo Kathal Nenjam

Image
  உறங்குமோ காதல் நெஞ்சம்  குரு அரவிந்தன்                                                                                                                                   நீண்ட வரிசை மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. ஒவ்வெருவராக வரிசையில் வந்து பயபக்தியோடு விளக்கேற்றி மாவீரரின் கல்லறைகளில் வைத்து, மலர் தூவி வணங்கினார்கள். இருண்டும் இருளாத அந்த மாலை நேரத்து மங்கிய வெளிச்சம் மௌனமாக ஏதோ சோகக் கதை சொன்னது.  ""விடியலை நோக்கிப் போகிறோம்"" என்று அவர்கள் மிகுந்த நம்பிக்கையோடு சொன்ன கடைசி வார்த்தைகளின் அர்த்தம் என்ன என்பது இப்பொழுது, இந்தக் கணத்தில் தான் இவர்களுக்குப் புரிந்தது! சுமதி விளக்கை ஏற்றும் போது கைகள் மெல்ல நடுங்கின. விளக்கை இறுக்கிப் பிடித்து,நடுங்கும் கைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.  உதடுகள் துடிக்க மனசு வெம்பி வெடித்து விடுமோ என்ற பயத்தில் "கூடாது...நான் அழக்கூடாது" என்றுதிரும்பத் திரும்ப தனக்குள்ளே வேண்டிக் கொண்டாள். ஆங்காங்கே சிலர் ஓவென்று கத்தி அழுது இதுவரை தங்கள் மனதுக்குள் அடக்கி வைத்திருந்த பிரிவுத் துயரத்தை வெளியே கொட்டிக் கொண்டிருந்தார்கள். அவள