சிறுகதை திறனாய்வுப் போட்டி - 2023

உங்கள் திறமைக்கு அதிஷ்டம் காத்திருக்கிறது வெல்லுங்கள் 150,000 ரூபாய்கள்! எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்தும் உலகளாவிய திறனாய்வுப் போட்டி - 2023 தமிழ் இலக்கிய உலகில் புகழ் பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் தமிழ் இலக்கிய சேவையைப் பாராட்டும் முகமாகவும், வாசிப்பு, எழுத்துப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கமாகவும் இடம்பெறும் குரு அரவிந்தன் எழுதிய நாவல், சிறுகதை தொடர்பான திறனாய்வுப் போட்டி. 15 பரிசுகள், மொத்தம் 150,000 ரூபாய்கள், இலங்கை ரூபாயில் வழங்கப்படும். முதலாம் பரிசு இலங்கை ரூபாய்கள் – 30,000. இரண்டாவது பரிசு இலங்கை ரூபாய்கள் – 25,000. மூன்றாவது பரிசு இலங்கை ரூபாய்கள் - 20,000. நாலாவது பரிசு இலங்கை ரூபாய்கள் - 15,000. ஐந்தாவது பரிசு இலங்கை ரூபாய்கள் - 10,000. 10 பாராட்டுப் பரிசுகள் இலங்கை ரூபாய்கள் தலா – 5000. குரு அரவிந்தன் அவர்களின் படைப்புக்களுக்கான திறனாய்வுப் போட்டி . குறைந்தது 2 புதினங்கள் அல்லது 4 சிறுகதைகள் பற்றி உங்களின் கருத்துரைகளைத் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் 5 பக்கங்களுக்க...