CUBSim- ‘என்ன சொல்லப் போகிறாய்?’
கியூபிசக் கோட்பாட்டை முன்வைத்து ‘என்ன சொல்லப் போகிறாய்?’ சுலோச்சனா அருண் நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஏற்படுத்தப்பட்ட நிகழ்வுதான் ‘சூம்’ என்று சொல்லப்படுகின்ற மெய்நிகர் நிகழ்வாகும். பல்வேறு நாடுகளில் இருந்தும், பலரும் பங்கு பற்றக்கூடியதாகவும் இது அமைக்கப்பட்டிருக்கின்றது. சென்ற சனிக்கிழமை யூன் 15 ஆம் திகதி இலக்கியவெளி குழுவினர் சர்வதேச ரீதியாக இலக்கியம் சார்ந்து நடத்திய மெய் நிகர் நிகழ்வு ஒன்று இடம் பெற்றிருந்தது. கோவிட் காரணமாக வெளிவராத நூல்கள் பற்றிய திறனாய்வுகளும், கருத்துப் பரிமாற்றங்களும் கனடிய தமிழ் இலக்கியத்தின் துரித வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, இந்த நிகழ்வு ஏற்பாடாகியிருந்தது. இந்த நிகழ்வில் எழுத்தாளர் குரு அரவிந்தனின் படைப்புகள் என்ற தலைப்பில் பலர் உரையாற்றினார்கள். முதலில் அறிமுக உரை நிகழ்த்திய இலக்கியவெளி அகில் சாம்பசிவம் அவர்கள், சர்வதேசப் புகழ்பெற்ற, ஈழத்தமிழ் எழுத்தாளர்களில் அதிக வாசகர்களைக் கொண்ட எழுத்தாளர்களில் ஒருவரான குரு அரவிந்தன் ரொறன்ரோவில் கணக்காளராகவும், ஆசிரியராகவும் பணியாற்றுகின்றார். கனடிய தமிழ் சிறுவர் இலக்கியத்தின் முன்னோடியான இவர், கனடா ...