Novel - Urunkumo Kathal Nenjam
உறங்குமோ காதல் நெஞ்சம் குரு அரவிந்தன் நீண்ட வரிசை மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. ஒவ்வெருவராக வரிசையில் வந்து பயபக்தியோடு விளக்கேற்றி மாவீரரின் கல்லறைகளில் வைத்து, மலர் தூவி வணங்கினார்கள். இருண்டும் இருளாத அந்த மாலை நேரத்து மங்கிய வெளிச்சம் மௌனமாக ஏதோ சோகக் கதை சொன்னது. ""விடியலை நோக்கிப் போகிறோம்"" என்று அவர்கள் மிகுந்த நம்பிக்கையோடு சொன்ன கடைசி வார்த்தைகளின் அர்த்தம் என்ன என்பது இப்பொழுது, இந்தக் கணத்தில் தான் இவர்களுக்குப் புரிந்தது! சுமதி விளக்கை ஏற்றும் போது கைகள் மெல்ல நடுங்கின. விளக்கை இறுக்கிப் பிடித்து,நடுங்க...