Posts

Showing posts from December, 2023

மூன்றாவது பெண்..! - Short Story

Image
  மூன்றாவது பெண்..! குரு அரவிந்தன் - Kuru Aravinthan அந்தச் சிறுமி சட்டென்று எனது கவனத்தைத் தன் பக்கம் திருப்பினாள், காரணம் அவளது அந்தக் குரலில் பாசம் இழையோடியிருந்தது. மூத்த மகளாக இருக்க வேண்டும் மற்றப் பிள்ளைகளைவிடச் சற்றுப் பெரியவளாகத் தெரிந்தாள். பத்து வயதிருக்கலாம். ‘டாட் எனக்கு ஒரு ஸ்சுமூதி’ என்று இங்கிருந்தே குரல் கொடுத்தாள். அந்தச் சிறுமியின் குரலில் இருந்த கவர்ச்சி போலவே அவளிலும் அப்படி ஒரு கவர்ச்சி இருந்தது. நன்றாக உடை அணிந்து அழகாக, சிரித்த முகத்தோடு, அமைதியாக இருந்தாள். அந்தக் குடும்பத்தினர் எனக்கு அருகே இருந்த மேசையில் தான் சுற்றிவர அமர்ந்திருந்தார்கள். தாய் தகப்பன் மூன்று பிள்ளைகள். தகப்பன் பிள்ளைகளிடம் ‘என்ன சாப்பிடப் போறீங்க..?’ என்று அவர்களது விருப்பத்தைக் கேட்டார். நியோன் விளக்கு வெளிச்சத்தோடு இருந்த பதாகையில் உணவு வகைகளின் பெயர்களும், அதற்கான படங்களும், விலைப்பட்டியலும் மின்னிக் கொண்டிருந்தன. அவர்கள் அதை உன்னிப்பாகப் பார்த்து ஆளுக்கொரு உணவைக் குறிப்பிட, தகப்பன் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தார். யாருக்கு என்ன தேவை என்பது எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டபின், மனைவ...

சோமாலியப் பூனைகள் - Short Story

Image
  சோமாலியப் பூனைகள்   குரு அரவிந்தன் - Kuru Aravinthan பக்கத்து வீட்டு பூனை மாலை நேரங்களில் எங்கள் வீட்டின் பின் வளவைக்கடந்து அடுத்த வீட்டிற்குச் செல்வதை அடிக்கடி நான் கண்டிருக்கின்றேன். எனது எல்லைக்குள் வந்ததாலோ என்னவோ ஒரு கணம் நின்று என்னைப் பார்த்துவிட்டு அப்புறம் விறைப்பாக வாலை நீட்டியபடி கடந்து செல்லும். அந்தப் பூனையைப் பார்ப்பதற்கு மெல்லிய மண்ணிறமாயும் கழுத்துப் பக்கம் சாடையான வெள்ளை நிறமாயும் இருக்கும். செல்லப்பிராணி என்பதால் அதை அரவணைப்பேன் என்று எதிர்பார்த்திருக்கலாம். பின் வளவில் ஒரு சிறிய வீட்டுத் தோட்டம் இருந்தது. தக்காளி, மிளகாய், கத்தரி போன்ற சில செடிகளைப் பயிரிட்ருந்தேன். யூன் தொடக்கம் ஆகஸ்ட் வரைதான் பலன் எடுக்கலாம். அப்புறம், குளிர், பனி என்று வந்துவிடும். என்னைப் பொறுத்தவரையில் ஊரிலே பார்த்தது போன்றதொரு பூனைதான் அது, ஆனால் எனது தங்கைதான் சொன்னாள், பார்ப்பதற்கு அபிஸீனியன் பூனைகள் போல இருந்தாலும், இது ‘சோமாலியன் காற்’ என்று. பத்து பன்னிரண்டு வருடங்கள் வரை வாழக்கூடிய இவை, ஏழு எட்டு இறாத்தல் நிறை இருக்கலாம், பெரிய கண்கள், பெரிய காது, கழுத்திலே நிறைய முடி இருக்கும்...

குட்டையில் விழுந்த நாணயம் - Short Story

Image
  குட்டையில் விழுந்த நாணயம் குரு அரவிந்தன்  - Kuru Aravinthan குறித்த நேரத்திற்குப் போகவேண்டும் என்பதால், நான் தங்கியிருந்த ஹோட்டலில் குளித்து வெளிக்கிட்டுத் தயாராக நின்றேன். எனது அறைக் கதவு தட்டிச் சத்தம் கேட்டது. திறந்து பார்த்தேன். ‘மிஸ்டர் ஹரிஷ்..’ என்றாள் வாசலில் நின்றவள். ‘யெஸ்’ என்றேன். ‘பொஞ்சொர்னோ.. ஐ.. யாம் யூலியானா, இன்றைய நாள் நன்றாக அமையட்டும், உங்களைச் சுற்றுலாவுக்கு அழைத்துப் போக வந்திருக்கிறேன்’ மூச்சுவிடாமல் சொல்லி முடித்தாள். ‘ஓ.. ஹாய்..!’ என்று வாய் சொன்னாலும், நான் அதிர்ந்து போயிருக்கிறேன் என்பதை எனது வார்த்தைகளே உணர்த்தின. தவறுதலாக எனது அறைக்கதவைத் தட்டிவிட்டாளோ என நினைத்தேன். ரோம் நகரத்தில் இவ்வளவு அழகான ஒரு இளம் பெண்ணைச் சுற்றுலாத் துறையினர் எனக்கு வழிகாட்டியாக அனுப்பி வைப்பார்கள் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை.  பொதுவாக நான் சென்ற நாடுகளில் எல்லாம் சுற்றுலாதுறையில் அனுபவப்பட்ட, கொஞ்சம் வயது கூடியவர்களைத்தான், அனேகமாக ஆண்களைத்தான் பல இடங்களில் இதுவரை காலமும் அனுப்பி வைத்திருக்கிறார்கள். ‘போகலாமா?’ என்று கேட்டாள். ‘நான் ரெடி, போகலாம்’ என்றேன். பு...

401 - Short Story

Image
  401 குரு அரவிந்தன்  - Kuru Aravinthan இயற்கைக்கு என்ன கோபமோ தெரியவில்லை, திடீரென எனது பக்கம் உள்ள யன்னலில் கல்லெறிந்ததுபோல, பொட்டுப் பொட்டாய்ப் பெரிய மழைத்துளிகள் சத்தத்தோடு வந்து விழுந்தன. பனிப்பிரதேசம் என்பதால், சிறிய பனிக்கட்டிகளோ என்று முதலில் பயந்து போனேன். அடுத்த நிமிடம் வானம் இருட்டிக்கொள்ள, மழையோ கொட்டோ கொட்டென்று கொட்டத் தொடங்கியது. போதாக் குறைக்கு இடியும், மின்னலும் மழையோடு சேர்ந்து கொண்டு பயங்காட்டின. இந்த சீரற்ற காலநிலை இப்படியே தொடர்ந்தால் விரைவாகவே இருட்டிவிடும் போல இருந்தது. இயற்கை இப்படி ஓவென்று அழுததை நான் இங்கே ஒருபோதும் பார்த்ததில்லை. சோவென்ற மழையின் இரைச்சலில் பியர்சன் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானத்தின் இரைச்சல் அடங்கிப் போயிருந்தது. இருக்கைப்பட்டியைக் கொஞ்சம் தளர்த்திக் கொண்டு, யன்னல் கண்ணாடியில் முகம்புதைத்து வெளியே பார்த்தேன். பனிப்புகாரில் அகப்பட்டது போல, ஆங்காங்கே மின்னும் சிகப்பு, மஞ்சள் வெளிச்சங்களைத் தவிர வேறு எதுவும் கண்ணுக்குத் துல்லியமாய்த் தெரியவில்லை. காலநிலை மோசமாக இருந்ததால் விமானம் கீழே இறங்க முடியாமல், மிகவும் பதிவாக மீண்டும்...