எலியானாவின் கடைசிப் பயணம் By : Kuru Aravinthan திடீரெனக் கேட்ட அந்தப் பெண்ணின் அவலக்குரல் அவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது? காரணம் புரியாமல் அதிர்ச்சி அடைந்த தரைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஒருவரை ஒருவர் கேள்விக் குறியோடு பார்த்துக் கொண்டனர். அந்தப் பெண்ணின் அவலக்குரல் எதைக் குறிக்கிறது? அந்த அவலக் குரல் எலியானாவுடையதாக இருக்குமோ? அப்படியானால் அவளுக்கு என்ன நடந்திருக்கும்? எதுவும் புரியாமல் அவர்கள் அதிர்ந்து போயிருந்தனர், காரணம் அவர்களுடனான தொலைத்தொடர்பு திடீரெனத் துண்டிக்கப்பட்டிருந்தது. ஆஜன்ரைனாவின் ‘சான்யுவான்’ என்ற நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து அந்தப் பெண்ணின் அவலக்குரல் கேட்டதற்குக் காரணம் அந்த நீர்மூழ்கியில் பயணித்த 44 பணியாட்களில் ஒரே ஒரு பெண் பணியாளர் எலியானாவாகத்தான் இருந்தாள். ஏன் திடீரென நீர்மூழ்கிக் கப்பலுடன் தொடர்பு கொள்ள முடியாமற் போனது? பல கேள்விகளுக்கு பதில் தெரியாமல் தரைக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் சான்யுவான் என்ற நீர்மூழ்கியில் இருந்த பணியாட்களின் குடும்பத்தினரும் விடை தெரியாத கேள்விக்குப் பரபரப்பாக விடையைத் தேடிக் ...