Posts

Showing posts from September, 2024

Writer Jeyamohan

Image
 

Story- என்ன சொல்லப் போகிறாய்? - கியூபிசம்

Image
  கியூபிசக் கோட்பாட்டை முன்வைத்து ‘என்ன சொல்லப் போகிறாய்?’ சுலோச்சனா அருண் நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஏற்படுத்தப்பட்ட நிகழ்வுதான் ‘சூம்’ என்று சொல்லப்படுகின்ற மெய்நிகர் நிகழ்வாகும். பல்வேறு நாடுகளில் இருந்தும், பலரும் பங்கு பற்றக்கூடியதாகவும் இது அமைக்கப்பட்டிருக்கின்றது. சென்ற சனிக்கிழமை யூன் 15 ஆம் திகதி இலக்கியவெளி குழுவினர் சர்வதேச ரீதியாக இலக்கியம் சார்ந்து நடத்திய மெய் நிகர் நிகழ்வு ஒன்று இடம் பெற்றிருந்தது. கோவிட் காரணமாக வெளிவராத நூல்கள் பற்றிய திறனாய்வுகளும், கருத்துப் பரிமாற்றங்களும் கனடிய தமிழ் இலக்கியத்தின் துரித வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, இந்த நிகழ்வு ஏற்பாடாகியிருந்தது. இந்த நிகழ்வில் எழுத்தாளர் குரு அரவிந்தனின் படைப்புகள் என்ற தலைப்பில் பலர் உரையாற்றினார்கள். முதலில் அறிமுக உரை நிகழ்த்திய இலக்கியவெளி அகில் சாம்பசிவம் அவர்கள், சர்வதேசப் புகழ்பெற்ற, ஈழத்தமிழ் எழுத்தாளர்களில் அதிக வாசகர்களைக் கொண்ட எழுத்தாளர்களில் ஒருவரான குரு அரவிந்தன் ரொறன்ரோவில் கணக்காளராகவும், ஆசிரியராகவும் பணியாற்றுகின்றார். கனடிய தமிழ் சிறுவர் இலக்கியத்தின் முன்னோடியான இவர், கனடா தமிழ் எழுத்தா...

SOPCA - சொப்கா குடும்ப மன்றம்

Image
  கனடா பீல் பிரதேச சொப்கா மன்றத்தின் 15வது ஆண்டுவிழா குரு அரவிந்தன் யூலை மாதம் 6 ஆம் திகதி கனடாவின் பீல் பிரதேசத்தில் உள்ள சொப்கா குடும்ப மன்றத்தினர் தமது 15வது ஆண்டு விழாவை மிசசாகாவில் ஸ்ரிவ்பாங் வீதியில் உள்ள அனாபில்ஸ் மண்டபத்தில் சிறப்பாக நடத்தினார்கள். மங்கள விளக்கேற்றி, அகவணக்கமும் அதைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து, கனடா பண் ஆகியன இடம் பெற்றன. தொடர்ந்து வரவேற்புரையும் அதன் பின் மன்றத் தலைவர் யாழினி விஜயகுமாரின் உரையும் இடம் பெற்றன. இந்தவிழா சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த அனைவருக்கும் அவர் தனது உரையில் நன்றியைத் தெரிவித்திருந்தார். இந்த விழாவின் பிரமத விருந்தினராகக் கனடா காவல்துறை பெண் அதிகாரியான ஏவா ரட்ணகுமார் கலந்து கொண்டார். இளைய தலைமுறையினருக்கு ஏற்றவகையில் ஒழுக்கம், கட்டுப்பாடு சார்ந்து அறிவூட்டும் வகையில் அவரது உரை இடம் பெற்றிருந்தது. அடுத்து ஈசாபரா ஈசானந்தாவின் உரை இடம் பெற்றது. அடுத்து இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ரொறன்ரோ கல்விச் சபையைச் சேர்ந்த அனு சிறீஸ்கந்தராஜாவின் உரை இடம் பெற்றது. அவரது உரை இளைய தலைமுறையினரின் கல்வி சார்ந்ததாக அமைந்திருந்தது. எ...

அதிபர் பொ. கனகசபாபதி

Image
  அதிபர் பொ. கனகசபாபதி கனடாவில் நினைவுகூரப்பட்டார். குரு அரவிந்தன் மகாஜனக் கல்லூரி முன்நாள் அதிபர் அமரர் பொ. கனகசபாபதி அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்த 10 வது ஆண்டு நினைவுநாள் கனடாவில் ரொறன்ரோவில் உள்ள மல்வேன் பூங்காவில் 4-9- 2024 அன்று நினைவு கூரப்பட்டது. பொதுவாக ஒருவர் மறைந்த தினம் என்றால் அது ஒரு சோகசம்பவமாக இருக்கும். அதைத் தவிர்ப்பதற்காகத்தான், அவர் புகுந்த மண்ணில் தமிழ் இனத்திற்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி அதிபரின் பிறந்த தினத்திலன்று ஒவ்வொரு வருடமும் இங்குள்ள நண்பர்கள், பழைய மாணவர்கள், மற்றும் குடும்பத்தினரால் நினைவு கூரப்படுகின்றது. இங்குள்ள நண்பர்களும், பழைய மாணவர்களும் இணைந்து அவரது நினைவாக, உள்ளுராட்சி மன்றத்தின் உதவியுடன் மல்வேன் பொதுப் பூங்காவில் ஒரு மரத்தை நட்டு, அதன் கீழ் ஒரு இருக்கையையும் வைத்திருக்கிறார்கள். இருக்கையிலும், நினைவு மரத்தின் கீழும் அவரைப் பற்றிய விபரங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. பூங்காவுக்கு வரும் அத்தனை பேரும் அதை வாசித்துச் செல்லும்போது, நினைவுத்தூபி போல, தமிழர்கள் கனடாவில் வாழ்ந்த அடையாளத்தையும், அவர்கள் ஆற்றிய சேவையையும் அது காட்டி நிற்கின்றது....

ஆக்குவாய் காப்பாய்

Image
‘ ஆக்குவாய் காப்பாய்’ கனடியத் தமிழ்த் திரைப்படம் குரு அரவிந்தன் தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் ஒன்றான கனடாவில் தயாரிக்கப்பட்ட ‘ஆக்குவாய் காப்பாய்’ என்ற திரைப்படம் பற்றிய ஊடகச் சந்திப்பு சென்ற ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ரொறன்ரோ நகெட் அவென்யூவில் உள்ள பிறைமா நடனப்பள்ளி மண்டபத்தில் மாலை 7 மணியளவில் நடைபெற்றது. கனடாவில் இருந்து வெளிவரும் ‘தமிழ் ஆரம்,’ ‘வதனம்’ ஆகிய தமிழ் இதழ்களின் ஆசிரியர் என்ற வகையில் எனக்கும் அழைப்பு வந்தது. இந்தப்படம் கனடா நாட்டில் வசிக்கும் ஒரு தமிழ்ப் பெண்ணின் வாழ்க்கைப் போராட்டங்களை மையப்படுத்திய கதைக்கருவைக் கொண்டிருக்கின்றது. லூனார் மோஸன் பிக்சர்ஸ் மற்றும் ஆர். புரொடக்ஸன்ஸ் இணைந்து தயாரித்த இந்தப் படம் கனடா எஸ். மதிவாசனின் எழுத்து, இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. இந்தத் தமிழ்ப்படம் செப்ரெம்பர் மாதம் 28 ஆம் திகதி யோர்க் சினிமா திரையரங்கில் மதியம் ஒரு மணிக்குத் திரையிடப்பட இருக்கின்றது.  இதில் கதாபாத்திரங்களாக கிருந்துஜா ஸ்ரீகாந், ஜெயப்பிரகாஸ், டேனிஸ் ராஜ், செந்தில் மகாலிங்கம், மதிவாசன் சீனிவாசகம், சுரபி யோகநாதன், ஆஸ்லி சுரேஸ்குமார், ஆதியா தயாளன்,...

Aaraam Nilaththenai - ஆறாம் நிலத்திணை’

Image
  ஆறாம் நிலத்திணை’ Mala Aravin o e r t d o s S p n 2 1 a 0 5 t t l f e 0 S r c m 4   2 l b e l g e t f 2 2 u c 3 1 c 9 3 m 0 5 1 f t 2 4 f 7 8 t p 7      ·  Shared with Your friends தினகரன் Thinakaran 10:17:12 September 12, 2021 Main menu வௌிநாடு Home தாயக நினைவுகளை மனக்கண் முன்பாக கொண்டு வருகின்ற ‘ஆறாம் நிலத்திணை’ தாயக நினைவுகளை மனக்கண் முன்பாக கொண்டு வருகின்ற ‘ஆறாம் நிலத்திணை’ Tuesday, July 27, 2021 - 9:08am ஆசிரியர்: குரு அரவிந்தன் வெளியீடு: இனிய நந்தவனம் பதிப்பகம், திருச்சி குரு அரவிந்தனின் எழுத்துகளில் தென்றலின் மென்மையும், புயலின் வன்மையும் கலந்து வீசுகின்றன. நகைச்சுவைச் சிற்றாறும், கோபப் பெருங்கடலும் சங்கமித்து ஓடுகின்றன. இடம், பொருள், நிகழ்ச்சி, பாதிப்பு, மனவெழுச்சி, தன்மானம் என்னும் வழித்தடங்களில் தனது தடம் மாறாது பயணிக்கிறது இவரது எழுதுகோல். கட்டுரையா? புதினமா? என்று வாசிப்பவர் ஐயுறும் வண்ணம் நகர்கின்றன அத்தியாயங்கள். புலம்பெயர்ந்த தமிழரொருவர், தமது தாயகத்தில் நிகழ்ந்தவற்றை மனதில் சுமந்து பாரம் தாங்காமல் புத்தகச் சுமைதாங்கிக் கல்லில் அதை இறக்கி வை...