Posts

NOVEL - Ammavin Pillaikal

Image
                                                      Novel - Ammavin Pillaikal NOVEL AMMAVIN  PILLAIKAL

NOVEL - Enna Sollaup Pookirai..?

Image
     Novel - Enna Sollaup Pookirai

NOVEL - Solladi Un Manam Kalloodi..?

Image
  Novel - Solladi Un Manam SOLLADI  UN  MANAM KALLOODI... ? NOVEL

AananthaVikatan: Vaaimaigin Idaththil..

Image
Story: Vaaimaigin Idaththil.. வாய்மையின் இடத்தில்.. குரு அரவிந்தன்' ( ‘உங்களோடு பழகினது இருக்கட்டும் சார்.. உங்க பையனோட எப்படிப் பழகினா? ரொம்ப நெருக்கமா பழகினாவா? ரெண்டுபேரும் ஒண்ணா வெளியே போய் வருவாங்களா..?’  )     (  நன்றி: ஆனந்தவிகடன் ) தொ லைபேசி அலறிக் கொண்டிருந்தது. சாதாரணமாகக் கிணுகிணுக்கும் தொலைபேசிகூட இப்போதெல்லம் அலறுவது போலத்தான் இந்த வீட்டில் கேட்கிறது. கொஞ்ச நாட்களாக யாராவது துக்கம் விசாரித்துக் கொண்டே இருக்கிறார்கள். புரொபஸர் சிவராமன் மௌ;ள எழுந்து வேண்டா வெறுப்பாகத் தொலைபேசியை எடுத்தார். யாராக இருக்கும்? என்ன செய்தியாக இருக்கும?; இப்படித்தான் அன்றும் தொலைபேசி அலறியது. அவரது மகன் சாலை விபத்தில் இறந்து போன செய்தியை இடியாக அவர்மீது இறக்கியது. அந்த அதிர்ச்சியில் இருந்து அவர் இன்னமும் மீளவில்லை. அவரது குடும்பத்துக்குத் தெரிந்த பலர் நேரே வந்து துக்கம் விசாரித்தார்கள். வரமுடியாத சிலர் தொலைபேசியில் துக்கம் விசாரித்தார்கள். அவன் பிரிந்து விட்டான் என்பதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு கனவு போல எல்லாம் முடிந்து விட்டது. ‘ஹலோ!’ ‘மே ஐ ஸ்பீக் டு புரொபஸர் ச...

Contest - Novels and Short Stories

Image
 Details About Contest Writer Kuru Aravinthan Fan club  உங்களுக்காக அதிஷ்டம் காத்திருக்கிறது - வெல்லுங்கள் 110,000 ரூபாய்கள்! எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்தும் திறனாய்வுப் போட்டி. தமிழ் இலக்கிய உலகில் புகழ் பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் 50வது ஆண்டு நிறைவான தமிழ் இலக்கிய சேவையைப் பாராட்டும் முகமாகவும், வாசிப்பு, எழுத்துப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கமாகவும் நடக்கும் உலகளாவிய நாவல், சிறுகதை திறனாய்வுப் போட்டி.  பரிசு பெறும் எழுத்தாளர்களுக்காகப் 13 பரிசுகள் , மொத்தம் இலங்கை நாணயம் 110,000 ரூபாய்கள் . பரிசுகள் இலங்கை நாணயத்தில் வழங்கப்படும். முதலாம் பரிசு இலங்கை ரூபாய்கள் – 25,000. இரண்டாவது பரிசு இலங்கை ரூபாய்கள் – 20,000. மூன்றாவது பரிசு இலங்கை ரூபாய்கள் - 15,000. 10 பாராட்டுப் பரிசுகள் (ஒவ்வொருவருக்கும் இலங்கை ரூபாய்கள் – 5000.) பாராட்டுப் பரிசுகள் (10) மொத்தத்தொகை ரூ. 50,000. குரு அரவிந்தன் அவர்களின் படைப்புக்களுக்கான திறனாய்வுப் போட்டி. குறைந்தது 2 புதினங்கள் அல்லது 4 சிறுகதைகள் பற்றி உங்களின் கருத்துரைகளைத் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் 4 பக...

Story - எலியானாவின் கடைசிப் பயணம்

Image
  எலியானாவின் கடைசிப் பயணம் குரு அரவிந்தன் திடீரெனக் கேட்ட அந்தப் பெண்ணின் அவலக்குரல் அவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது?  காரணம் புரியாமல் அதிர்ச்சி அடைந்த தரைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஒருவரை ஒருவர் கேளள்விக் குறியோடு பார்த்துக் கொண்டனர்.  அந்தப் பெண்ணின் அவலக்குரல் எதைக் குறிக்கிறது?  அந்த அவலக் குரல் எலியானாவுடையதாக இருக்குமோ? அப்படியானால் அவளுக்கு என்ன நடந்திருக்கும்?  எதுவும் புரியாமல் அவர்கள் அதிர்ந்து போயிருந்தனர், காரணம் அவர்களுடனான தொலைத்தொடர்பு திடீரெனத் துண்டிக்கப்பட்டிருந்தது.  ஆஜன்ரைனாவின் ‘சான்யுவான்’ என்ற நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து அந்தப் பெண்ணின் அவலக்குரல் கேட்டதற்குக் காரணம் அந்த நீர்மூழ்கியில் பயணித்த 44 பணியாட்களில் ஒரே ஒரு பெண் பணியாளர் எலியானாவாகத்தான் இருந்தாள்.  ஏன் திடீரென நீர்மூழ்கிக் கப்பலுடன் தொடர்பு கொள்ள முடியாமற் போனது? பல கேள்விகளுக்கு பதில் தெரியாமல் தரைக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் சான்யுவான் என்ற நீர்மூழ்கியில் இருந்த பணியாட்களின் குடும்பத்தினரும் விடை தெரியாத கேள்விக்குப் பரபரப்பாக விடையைத் தேடிக் கொண்டிருந்தனர்....

Story - பரியாரி மாமி

Image
  பரியாரி மாமி   குரு அரவிந்தன் (ஞானம் இதழ் சிறுகதைப் போட்டியில் 2013 சிறப்புப் பரிசு பெற்ற சிறுகதை) யுத்தம் முடிஞ்சு போச்சு என்ற அறிவிப்பு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டாலும் எங்களை மீள்குடியேற்றுவதில் அவர்களுக்குத் தயக்கமிருந்தது. கண்ணிவெடி என்று சொல்லிக் காலங்கடத்திக் கொண்டிருந்தவர்கள் ஒருவிதமாக எங்களை கொண்டு வந்து இங்கே இறக்கிவிட்டார்கள். தேர்தலுக்காகத்தான் இங்கே கொண்டு வந்து விடுவதாக எங்களைக் கொண்டு வந்து இறக்கிவிட்ட உத்தியோகத்தர்மார் தங்களுக்கை கதைச்சுக் கொண்டதும் என்ரை காதிலை விழுந்தது. எது எப்படியோ ஊருக்கு வந்து சேந்தாச்சு எண்ட நிம்மதியே இப்போதைக்குப் போதுமானதாக இருந்தாலும் முள்ளிவாய்க்கால் நினைவுகள் மட்டும் மனதில் ஆழமாயப் பதிந்து உறைந்து போயிருந்தன. வண்டியில இருந்து வெளியே இறங்கும்போது, இது நாங்கள் வாழ்ந்த ஊர்தானா என்ற சந்தேகம் எனக்கு எழுந்தது. ஆனாலும் பிறந்து வளர்ந்த மண் எண்டபடியால் அந்த மண் வாசைன ‘இதுதான் நீ தவழ்ந்த மண்’ எண்டதை உறுதி செய்தது. மரம் செடி கொடிகளாய் கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் பற்றிக் கிடந்தன. தெருவோரத்து அரசமரத்து வயிரவரைக் காணவில்லை. மரம்மட்டும் அடிய...