Story - உயரப்பாய்ச்சல்

 



இவன் இவள் ஐம்பால் பற்றவும் இவள் இவன் 

புன்தலை ஓரி  - குறுந்தொகை

...................................................................................................

உயரப்பாய்ச்சல்

குரு அரவிந்தன்


காலேஜ் மாணவர்கள் சிலர் கூட்டமாக நின்று வம்பளந்து கொண்டிருந்தார்கள். 

சுகந்தினி தனது சினேகிதிகளுடன் அவர்களுக்கு அருகே வந்த போது,

‘குதிரை வருதடா, பேசாம இருங்க’ என்றான் மதன்

அவள் தங்களைக் கடந்து பேசாமல் போய்விடுவாள் என்றுதான் அவர்கள் எதிர் பார்த்தார்கள். ஆனால் திரும்பி அவர்களுக்கு அருகே அவள் வந்தாள்.

‘யார்ரா என்னைக் கேலி பண்ணினது..?’

‘உன்னையா, நாங்க உன்னைப்பற்றி ஒண்ணும் சொல்லலையே’

‘எனக்குக் கேட்டிச்சே..!’

‘கேட்டிச்சா, என்னன்ணு..?’

‘குதிரைன்னு..!’

‘குதிரையா..?’ஆகாகா என்று கூட்டாளிகள் சிரித்தார்கள்.

‘என்னடா சிரிப்பு வேண்டிக்கிடக்கு,’ 

‘குதிரையைப்பற்றிக் கதைத்தால் நீ ஏன் கோபப்படுறாய்’

‘டேய்.. நீதானே முதல்ல இந்தப் பட்டப்பெயரை எனக்கு வைச்சாய்’ மதனைப் பார்த்து உறுமினாள்.

மதன் எதுவும் பேசாது மௌனமாக நின்றான்.

‘நீ ஒரு நேட், இடியட்.. என்னட்டை ஒருநாளைக்கு மாட்டுவாய், அப்ப வெச்சுக்கிறேன்..!’ என்று திட்டிக்கொண்டே சினேகிதிகள் புடைசூழ நகர்ந்தாள் அவள்.

இவர்கள் உறைந்து போய் நின்றார்கள். பெண்கள் கூட்டம் தாங்கள் என்னதான் நையாண்டி செய்தாலும் மரியாதை கருதிப் பேசாமல் போய்விடுவார்கள் என்றுதான் இவர்கள் இதுவரை நினைத்தார்கள்.

‘அதுசரி.. நேட் என்றால் என்னடா மச்சி’ ஒன்றும் தெரியாதது போலக் கேட்டான்  கிரி.

நேட் என்றால் புத்தகப்பூச்சின்னு அர்த்தம். அதுவும் இப்படி இவனைப்போல கண்ணாடி போட்டுக் கொண்டு திரிந்தால் போதும்..!

சுகந்தினி விளையாட்டுப் போட்டிகளில் பல பரிசுகள் பெற்றிருந்தாள். வேகமாக ஓடுவதில் மட்டுமல்ல, உயரப்பாச்சல்களிலும் விருதுகள் பெற்றிருக்கிறாள். தலைமுடியை மேலே இழுத்து ஒரு போனிரெயில் போட்டு, கட்டை சோட்சும் போட்டுக் கொண்டு அவள் தடியூன்றிப் பாயும்போது அவளது போனிரெலின் அசைவைப் பார்த்தே எல்லோரும் மயங்கிப் போவார்கள். உயரே சென்றதும், மிகவும் நளினத்தோடு குறுக்குத் தடியை தாண்டுவதைப் பார்ப்பதற்கே பலர் மைதானத்திற்கு வந்து கூடிநிற்பார்கள்.

ஒரே தெருவிலேதான் மதனும், சுகந்தினியும் சிறுவர்களாக இருக்கும்போது வசித்தார்கள். மதனின் வீட்டைக் கடந்துதான் அவளது வீட்டிற்குப் போகவேண்டும். இருவரின் மதமும் வேறுபட்டதாக இருந்தாலும் ஒன்றாகவே படித்து ஒன்றாகவே சாப்பிட்டு, விளையாடி வளர்ந்தார்கள்.

விளையாட்டு மைதானத்தில் இருவரும் விளையாடுலவார்கள். ஒரு நாள் சுகந்தினி உயரப்பாயும் போது கால் சுளுக்கிக் கொண்டது. எழுந்து நடக்க முடியாமல் வலியில்துடித்தாள்.

‘என்னாச்சு..?’ என்றான்.

‘வலிக்குதெடா, எழும்ப முடியல்லை..!’ அவள் வலியில் துடிப்பது தெரிந்தது.

அவன் கைகொடுத்து தூக்கிவிட்டான்.  அவள் வலிதாங்கமுடியாமல் மீண்டும் தரையில் சரிந்தாள். இப்ப என்ன செய்யலாம்.

உன்னை வீட்டுக்குக் கூட்டிப்போய்விடட்டா?

எப்படி..?

என்னோட சைக்கிள்ள, பார்ல உட்காருவியா?

அவள் சரி என்று தலையசைத்தாள்.

அவள் சற்றும் எதிர்பாரக்காதபோது சட்டென்று குனிந்து இரண்டு கைகளாலும் அவளை அப்படி தூக்கிக் கொண்டு சைக்கிளை நோக்கி நடந்தான்.

ஏய் என்ன செய்யிறாய் என்னை இறக்கிவிர்றா

நீதானே சரி சொன்னாய்

அதுக்கு என்னைத் தூக்கச் சொன்னேனா

தூக்கினால்தானே சயிக்கிள்ள கொண்டுபோய் இருத்தலாம்

ஆமால்லே, அதுவும் சரிதான்

சைக்கிளில் போகும்போது அவனது மூச்சுக் காற்று, முன்னால் இருந்த இவளது காதுமடலைத்தாண்டி கன்னத்திலும் சுட்டது. 

வீடு நோக்கிப் போகும்போது தெருநாய் ஒன்று சைக்கிளைத் துரத்தவே பயந்துபோய், அவனது கையை இறுகப்பிடித்த படியே நடுங்கினாள். அவன் அவளை ஆசுவாசப் படுத்தினான்.

அவளது வீடு வந்ததும், சைக்கிளில் இருந்து அவளை இறக்கினான். 

தூக்கவா என்று கேட்டான்.

அம்மாடி வேண்டாம் அவள் பயந்து போனாள். அவன் தூக்கினாலும் தூக்குவான், வீட்டிலே யாராவது கண்டால் அவ்வளவுதான்.

அவன் மெல்ல அவளைத் தாங்கியபடி உள்ளே அழைத்துச் சென்றான்.

அவர்களது உறவில் நல்லதொரு திருப்பு முனையாக இருக்க வேண்டிய அந்தச் சம்பவம், எதிர்பாராமல் பிரிய வேண்டி வந்ததால் பலனற்றதாகிவிட்டது. சுகந்தினி பருவமடைந்ததும் தனிமைப்படுத்தப்பட்டு பெண்கள் பாடசாலைக்கு அனுப்பப்பட்டாள். அதன் பின் வேவ்வேறு திசையில் அவர்கள் படிப்புத் தொடர்ந்தது. ஆனாலும் மீண்டும் ஒரே பல்கலைக் கழகத்தில் ஒரே பிரிவில் படிப்பைத் தொடர வேண்டி வந்தது. 

நீ என்னைக் குதிரை என்று சொன்னாய் நான் உன்னை நேட் என்று சொன்னேன் அவ்வளவுதான்.

இல்லை எனக்கு கிட்டப்பார்வை கொஞ்சம் குறைவு அதனாலேதான் கண்ணாடி பேர்றேன்

கண்பார்வை குறைவாயிருக்கிறது உன்னோட தப்பா

என்ன நடந்தது என்று தெரியவில்லை. அவள் இரண்டு வாரங்களாகத் தொலைந்து போயிருந்தாள்.

அவளை பெண்கள் பாடசாலையில் சேர்த்து விட்டதாக வீட்டிலே பேசும்போது தெரியவந்தது.

எருமை என்று நான் சொல்லது சரிதான் இதை உங்கிட்ட ஏன் சொல்றேன்னுகூட யோசிக்கமாட்டியா

புரியுது நான்கூட ரொம்பநாளாய் கல்யாண சாப்பாடு சாப்பிடலையே என்று யோசிச்சேன்

அவளுடைய முகம் மாறிப்போனது

உண்மையிலே நீ எருமைதாண்டா

அதுக்கு நான் என்ன செய்யிறது. என்னோட ஜீன் அப்படி இருக்கலாம்

இப்ப புரியுதா, அப்படித்தான் என்னோட காலும், கொஞ்சம் மெல்லிசாய், நீளமாய் இருக்கு என்னோட தப்பா

இல்லை, புரியுது 

என்ன புரியுது

என்னை மன்னிச்சிடு

எதுக்கு

நான் உன்னை அப்படிச் சொன்னதுக்கு

அப்போ, நானும்தான் உன்னை இப்படிச் சொன்னேன், நானும் உங்கிட்ட மன்னிப்புக் கேட்கணுமா

கேட்டால் தப்பில்லை என்றான்

வட்..? இப்ப என்ன சொன்னாய் அவள் கோபமாய் பார்த்தாள்.

இல்லை அது உன்னோட விருப்பம் என்று சொன்னேன்

ஓ.. அப்படியும் உனக்கு ஒரு எதிர்பார்ப்பிருக்கோ

இவன் ஞாயிற்றுக் கிழமைகளில் சார்ச்சுக்குப் போய்வருவான், இவள் வெள்ளிக் கிழமைகளில் கோயிலுக்குப் போய் வருவாள்.

சில நாட்களாக அவளுடைய சினேகிதி பாடசாலைக்கு வரவில்லை. மறுபடி வந்தபோது, அவள் தலையிவே ஸ்காவ் கட்டி வந்தாள் தலை முடியிழந்து மொட்டையாக இருந்தது.

ஏனென்னு தெரியாத சிலர் சிரித்தார்கள், தெரிந்த சிலர் அனுதாபப்பட்டார்கள். மறுநாள் இவளும் ஒரு ஸ்காவ் கட்டிக் கொண்டு வந்தாள். தலை மொட்டை அடித்திருந்தாள்.

‘என்னாச்சு?’ என்று கேட்டவர்களுக்கு ‘இப்ப இதுதான் பாஷன்’ என்றாள்.

இரண்டு நாள் எல்லோருக்கும் வேடிக்கையாக இருந்தது. அப்புறம் சாதாரண ஒரு நிகழ்வாகப் போய்விட்டது. யாரும் அதைப் பெரிதுபடுத்தவில்லை.

இருவருக்கும் மெல்ல மெல்ல முடி வளர்ந்தது.

மதனுடைய தங்கைதான் சொன்னாள் கான்சர்நோய் அதுதான் கியுமோ திறப்பி செய்ததால் முடி உதிந்து விட்தென்று.

அப்போ இவள்

அவளை எல்லோரும் கேலி செய்கிறாரகளே என்றுதான் இவள் தானாகவே மொட்டை அடித்துக் கொண்டாள்

சாந்தினியைப் பற்றிய தனது கணிப்பு எல்லாமே தவறானது என்பதை மதன் அப்போது புரிந்து கொண்டான்.

என்னை மன்னிச்சிடு சாந்தி என்றான்

எதுக்கு, என்கிட்ட அடிக்கடி மன்னிப்புக் கேட்கிறாய்?

அவன் தலையசைத்துவிட்டு நகர்ந்தான். என்னடா என்று அவள் அழைத்ததில் ஏதோ உறவு இருப்பதை உணர்ந்தான். சாந்தினி என்று அழைக்கும் அவன் அன்று சாந்தி என்றழைத்ததில் எதையோ உணர்தாள் அவள்.


மூத்தவள் பெண், மரியா என்று பெயர் வைத்தார்கள், இரண்டாவது ஆண் கண்ணன் என்று பெயர் வைத்தார்கள். நான்கு பேர் கொண்ட சிறிய குடும்பம். வீடு, கார் என்று பொருளாதாரச் சிக்கல் எதுவும் இல்லாமல் வாழ்க்கை ஓடியது.

‘அம்மா கோயிலுக்குப் போறேன் வர்றீங்களா?’

‘இல்லை நீங்க போயிட்டு வங்கம்மா.’

அவர்கள் வரமறுத்தது சாந்தினிக்கு ஒரு மாதிரியாக இருந்தது. மதன் வந்தான், மனைவியின் முகம் சரியில்லை என்பது புரிந்தது.


‘அப்பா சர்ச்சுக்குப் போறேன் வர்றீங்களா குட்டீஸ்..?’

நாங்களும் வர்றோமப்பா என்று கிளம்பினார்கள்.

சாந்தினியின் முகம் சட்டென்று மாறியது. எங்கே தவறு செய்தேன், ஏன் கோயிலுக்கு வரமாட்டேன் என்கிறார்கள்.

அவர்கள் அன்று கேட்ட கேள்விக்குத் தான் சரியான பதிலைக் கொடுக்கவில்லையோ என்று நினைத்தாள்.

அம்மா இந்தச் சிலைகள் எல்லாம் எப்படியம்மா அருள்பாலிக்கும்

சாந்தினி எதுவுமே சொல்லவில்லை. பிரகாரத்தில் நின்று தர்க்கம் செய்யவும் விரும்பவில்லை. பிரகாரத்தைச் சுற்றிக் கும்பிட்டு பிரசாதம் வாங்கிக் கொண்டு வெளி மண்டப்த்தில் சற்று நேரம் உட்காரந்திருந்தாள்.

அம்மா நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லலையே

நல்லது கண்ணா, இந்துமத தத்துவங்களை நீ அறிந்து கொள்ள வேண்டுமானால் முதலில் நீ நிறை வாசிக்க வேண்டும்.

‘போகிற வழியிலதானே இவங்களை இறக்கிவிட்டுப் போவோமே’ என்றான் மதன்

‘அப்போ, இவங்க உங்களோட வரல்லையா?’

‘இல்லை..!’ என்றான் மதன் 

அப்போ எங்கே போறாங்க? கேட்டாள் சாந்தினி.

‘ஒன்ராறியோ சயன்ஸ்சென்ரருக்கு..!’

காலம், இடம், சூழ்நிலைக்கேற்ப அறிவியலை நோக்கிய பார்வையும் அடுத்த தலைமுறையினரின் சிந்தனையில் இருப்பதைப் பெற்றோர் புரிந்து கொண்டனர்.


Comments

Popular posts from this blog

இரவில் தெரியும் சூரியன்

Story Review Contest -2025 - Web site

Story- Creeper