Syory- Kudi iruika Varalama? குடியிருக்க வரலாமா?
குடியிருக்க வரலாமா?
(குரு அரவிந்தன்)
போர்ஷன் வாடகைக்கு என்ற அறிவிப்பை பத்திரிகையில் படித்த நிருஜா அவசரமாக தனது அறைத் தோழி சாருலதாவை அழைத்தாள்.
"'சாரு இங்கே பார்த்தியா?"' வாடகைக்கு விடப்படும் என்ற விளம்பரத்தை அவளிடம் காட்டினாள்.
"'நல்ல ஏரியாதான் ஆனால் வாடகை அதிகமாய் இருக்குமோ தெரியாது?""என்றாள் சாரு.
"'எனக்கு இந்த ஏரியா தெரியும்! எதற்கும் போய்த்தான் பார்ப்போமே!""
இருவரும் டாக்ஸி பிடித்துக் கொண்டு அந்த முகவரியைத் தேடிப் போனார்கள்.
பிரதான வீதியில் இருந்து சற்று உள்ளே தள்ளி இருந்தது அந்த வீடு. வீட்டின் முன் பக்கத்தில் இருந்த சிறிதளவு நிலத்தில் நேர்த்தியாகவும் அழகாகவும் பூஞ்செடிகள் நடப்பட்டிருந்தன. சிகப்பு, வெள்ளை, மஞ்சள், ஆரேஞ்ச் நிறங்களில் ரோஜாச் செடிகள் பூத்துக் குலுங்குவதைப் பார்த்து ரசித்தபடி சாரு அப்படியே நின்று விட்டாள்.
"'என்ன சாரு மலர்களைப் பார்த்ததும் வீடு பார்க்க வந்ததையும் மறந்து அப்படியே நின்றுவிட்டாய்!"'
"'இல்லை நிரு அதற்காக நான் நிற்கவில்லை! இந்த மலர்களைச் சுற்றி ரீங்காரமிடும் தேனீக்களைப் பார்த்துக் கொண்டு நிற்கிறேன். இந்த மொட்டுக்கள் மலரப் போவதை எப்படித்தான் அவை மேப்பம் பிடித்து வருகின்றனவோ என்று தான் எனக்கு வியப்பாக இருக்கிறது."'
"'சரிதான்வாடி! போகும் இடமெல்லாம் இப்படியே வாயைப் பிளந்து கொண்டு நிற்காதே என்று எத்தனை தடவை சொல்லிட்டேன்!""
"'நிரு இப்ப எனக்கொரு சந்தேகம்?''
"'சந்தேகமா? என்ன சாரு வீடு பாhக்க வந்த இடத்தில்.....?""
"'நான் சொல்றதைக் கொஞ்சம் கேளேன் பிளீஸ்!"'
"'சரி சொல்லு!""
"'மலர் மலர்ந்ததால் வண்டு வந்ததா? இல்லை
வண்டு வந்ததால் இந்த மலர் மலர்ந்ததா?""
"'தொடங்கீட்டியா கவிதைபாட? நீ ரொம்ப அழகு என்கிற பெருமை உனக்கு! சினிமாப் பாட்டுக்களைக் கேட்டு இப்படியே கற்பனையில் வாழப் பழகிவிட்டாய். ஏன்தான் உனக்கு இப்படியான சந்தேகங்கள் வருகுதோ தெரியாது, இப்போ நாங்க வீடு பார்க்கணும் நீ பேசாமல் வர்றியா இல்லையா?""
நிருஜா பொய் கோபத்தோடு அவளது கையைப் பிடித்த இழுத்துக் கொண்டு போனாள்.
""என்ன சாரு அங்கே எட்டிப் பார்க்கிறாய்?''
"'இல்லை செப்பரேட் என்றன்ஸ் ஏதாவது இருக்கா என்று எட்டிப் பார்த்தேன்"".
"'இந்தா பார் எல்லா வசதிகளையும் எதிர் பார்க்காதே! வாடகை அதிகமில்லாட்டி நல்ல இடமென்றால் பேசாமல் குடி வருவதுதான் நல்லது.""
"'சரி முதலில் வீட்டுக்காரரோடு பேசிப்பார்ப்போமே!""
சாரு அழைப்பு மணியை அடித்தாள்.
வீட்டுக்கார அம்மா தான் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள். ஆள்பாதி ஆடைபாதி என்பதுபோல ஆடம்பரமாய் இருந்தாள்.
''பத்திரிகையில் வாடகைக்கு ஒரு போர்ஷன் இருப்பதாக விளம்பரம் பார்த்தேன்"'என்றாள் சாரு.
"'ஆமாம்.... உள்ளே வாங்க.""
இருவரும் தயக்கத்தோடு உள்ளே சென்றனர்.
"'உட்காருங்க...... சாவி எடுத்து வர்றேன்.""
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு ஹாலில் உள்ள செற்ரியில் மௌனமாய் உட்கார்ந்தனர்.
சாரு மெல்ல நோட்டம் விட்டாள். விலை உயர்ந்த அழகான கார்ப்பெட். தேக்கமரத்தில் செய்யப்பட்ட டைனிங்டெபிள், விலை உயர்ந்த ஷோபா செட், எல்லாமே பொருத்தமான நிறத்தில் அழகாகவும் நேர்த்தியாகவும் ஒழுங்கு படுத்தப் பட்டிருந்தன. பார்த்த மாத்திரத்திலேயே அந்த வீட்டின் அமைப்பு அவளுக்குப் பிடித்துப் போய்விட்டது. கோணஸ்டான்டில் வெற்றிக் கிண்ணங்களும், கேடயங்களும் அடுக்கிவைக்கப் பட்டிருந்தன.
வீட்டுக்கார ஆன்டி அவர்களை அழைத்துச் சென்று போர்ஷனைக் காட்டினார்.
"'இரண்டு பேரும் தங்கப் போறீங்களா?""
"'இல்லை நான் மட்டும்தான்! இது நிருஜா, என்னோட ஃபிரென்ட்."'
''அப்படியா? சந்தோஷம்.""
''ஏன் கேட்டீங்க?""
''இல்லை இரண்டு பேரும் தங்குவதானால் வாடகை கொஞ்சம் அதிகம்."'
''ஏன் அப்படி?""
''அதுவா.... யூற்ரிலிட்டி, பாருங்க இரண்டு பேரென்றால் லைட், வாட்டர் எல்லாமே அதிகமாகப் பாவிப்பீங்க.... அதனாலே தான்."'
''புரியுது.........நான் மட்டும் தான். இவ என்கூட இருந்தாலும் வாட்டர் கொஞ்சமும் வேஸ்டாகாது!""
"'ஏன்?""
"'இவா குளிக்கவே மாட்டா!""
"'அப்படியா? ரொம்ப வேடிக்கையாய் பேசிறீங்க!""
''செப்பறேற் என்றன்ஸ் இல்லையா ஆன்டி?""
''இல்லையம்மா....... மெயின்டோரைத்தான் பாவிக்கணும்.""
''என்னடி செப்பறேற் என்றன்ஸ் இல்லையாம்.... அப்ப உனக்குப் பிரைவசியே கிடையாது"' சாருவின் காதுக்குள் முணுமுணுத்தாள் நிரு.
''வீடு உங்க சொந்தமா?""
''ஆமா...... வீட்டுக் கடன் எல்லாம் கட்டி முடிச்சாச்சு. அது தான் கொஞ்சம் நிம்மதி.""
"'அப்படியா?"" சாரு ஆச்சரியப் பட்டாள்.
''யூஸ் ஏதாவது சாப்பிடுங்களேன்."'
''இல்லை வேண்டாம்!"' என்றாள் நிருஜா.
''பரவாயில்லை நீங்க கொண்டு வாங்க ஆன்டி!"' என்றாள் சாரு.
''ஏன்டி சொந்தம் கொண்டாடவா நாங்க வந்தோம்?"" என்று இடித்தாள் நிருஜா.
''நீ கொஞ்ச நேரம் சும்மா இருக்கிறியா?""
''ஆன்டி! உங்க கஸ்பன்ட் ஒரு ஸ்போட்மென் போல இருக்கே"' வெற்றிக் கிண்ணங்களையும் கேடயங்களையும் பார்த்த படி கேட்டாள் சாரு.
''ஆமாம்! அவரும் ஒரு ஸ்போட்மென்தான். அவர் இறந்து மூன்று வருஷமாச்சு. ஆனால் இது என்னோட மகன் சுரேனுடையது. அதோ பாருங்க அந்தப் படத்திலே இருக்கிறான்.""
மாடிப் படிகளின் தொடக்கத்தில் மாட்டியிருந்த குடும்பப் படத்தில் ஒரு சிறுவன் அவர்களைப் பார்த்துச் சிரித்தான்.
''உங்க மகன் ஸ்கூல் போறாரா? ரொம்பத் துருதுருன்னு இருக்கிறாரே""
நிருஜாவின் கேள்விக்கு வீட்டுக்கார அம்மா வாய்விட்டுப் பலமாய்ச் சிரித்தார்.
''ஏன் தப்பாய் ஏதாவது சொல்லிட்டேனா?""
''இல்லை.... அதெல்லாம் போய் முடிச்சாச்சு! காம்பியூட்டர் இஞ்சினியரிங் முடிச்சிட்டு இப்பதான் ஒரு கம்பனில நல்ல வேலைல சேர்ந்திருக்கிறான்."'
''ஓ...ஸாரி.... நான் படத்தைப் பார்த்திட்டு சின்னப் பையன் என்று நினைச்சிட்டேன்!"'
''இப்ப அவனைப் பார்தீங்கன்னா அசந்து போயிடுவீங்க, இருந்தீங்கன்னா இன்னும் கொஞ்ச நேரத்திலை வந்திடுவான்"'
"'என்னடி நாங்க வீடுபார்க்க வந்தோமா இல்லை மாப்பிள்ளை பார்க்க வந்தோமா?"" நிருஜா சாருவைப் பார்த்து முறைத்தாள்.
''சரி....சரி கொஞ்ச நேரம் பேசாமல் இரேன்""
சிறிது நேரத்தில் ஒரு கிரிக்கட் வீரனின் நடையோடு அவர்களைக் கடந்து உள்ளே போனான் ஒரு இளைஞன். எதிர்பாராமல் இவர்களைக் கண்டதும் அவனது முகம் குப்பென்று சிவந்து போயிற்று. படத்தில் இருந்த அதே குட்டிச் சுரேன்தான்!
''ஸ்மாட்கை'' சாருவை இடித்தாள் நிரு.
''பிடிச்சிருக்கா?""
''பிடிச்சிருக்கு!.....ஆமா ஆன்டி நீங்க என்ன கேட்டீங்க?"" தன்னைச் சுதாகரித்துக் கொண்டு கேட்டாள் சாரு.
''இல்ல..... உங்களுக்கு போர்ஷன் பிடிச்சிருக்கான்னு கேட்டேன்?""
''அதையா கேட்டீங்க? நாங்க இன்னமும் தீர்மானிக்கவில்லை ஆன்டி"' என்றாள் நிருஜா.
''பரவாயில்லை எனக்கு உங்க ஃபிரெண்டைப் பிடிச்சிருக்கு..... காபியாவது
சாப்பிட்டு போங்க""
காபி சாப்பிட்டு மறுநாள் வந்து முடிவு சொல்வதாகச் சொல்லி விட்டு இருவரும் வெளியே வந்தனர்.
"'எங்களுக்கு இது சரிப்பட்டு வராது சாரு, ரொம்ப வசதியானவங்க போல இருக்கு. கண்ணை மூடிக்கொண்டு இப்படி அநியாய வாடகை கேட்கிறாங்க. எனிவே ஒரு கப்காபி லாபம்!"" என்றாள் நிருஜா திரும்பிப் போகும்போது.
''ஒரு விஷயம் கவனிச்சியா நிரு?"" என்றாள் சாரு.
''என்ன பையன் ஸ்மாட்டாய் இருக்கான் அதுதானே?"" சொல்லிவிட்டு அவள் பலமாய்ச் சிரித்தாள்.
"'ஏன்டி சிரிக்கிறாய்?''
""இல்ல..... ஒரு இளைஞனை வீட்டுக்குள்ளே வைத்துக் கொண்டு உன்னைப் போல ஒருத்திக்கு ஒரு போர்ஷனை வாடகைக்குத் தந்தால் அவன் பாதுகாப்பாய் இருப்பானா என்கிற சந்தேகம்.......? அவனோட முகத்தைப் பார்த்தியா, எங்களைப் பார்த்ததும் வெட்கப்பட்டு குப்பென்று சிவந்து போச்சு! அதை நினைச்சுத்தான் சிரித்தேன்."' என்றாள் நிரு.
அது தான், அந்தச் சிரிப்புத்தான் எனக்கும் பிடிச்சிருக்கு! என்று சாரு மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.
''சரிதான் கடிக்காத..... வீட்ல இரண்டு பேரும், தாயும் மகனும் உத்தியோகம் பார்க்கிறாங்க அது தெரியுமா உனக்கு!""
"'இதிலென்ன அதிசயம்? இப்ப எல்லா ஃபமிலியிலும் இரண்டு பேரும்தான் உழைக்கிறாங்க!""
''நான் அதைச் சொல்லலை..... அவங்க வீட்டு லோன் எல்லாம் கட்டி முடிச்சிட்டாங்களாம்!""
''அதுக்கென்ன இப்போ?""
''மகனும் இஞ்சினியராக நல்ல கம்பனியிலே கைநிறையச் சம்பளம் வாங்கிறாராம்'".
''ஸோ.......வட்?""
''சொந்த மென்று சொல்லிக்க அவங்களுக்கு யாருமில்லையாம்! பிரச்சனையில்லாத குடும்பம்""
''அதற்காக இப்படி அநியாய வாடகை கேட்கணுமா?""
"'வாடகையைப் பற்றி யார் கவலைப்பட்டா? கொஞ்ச நாளைக்குத் தானே!""
"'கொஞ்ச நாளைக்கா? அப்புறம் எங்கே போவாய்?""
"'வாடகையில்லாமல் குடியிருப்பேன். அதற்கொரு வழியிருக்கு!""
"'எப்படி? என்ன வழியிருக்கு?""
''இருக்குடி.... இப்படி ஒரு சந்தர்ப்பத்திற்காகத்தான் இவ்வளவு காலமும் காத்திருந்தேன். ஒரு நல்ல கணவன் கிடைக்கணும், இந்த மாதிரி ஒரு பங்களாவில் குடியிருக்கணும் என்கிறது தான் என்னுடைய நீண்ட நாள் கனவு. என்னுடை கனவு நிறைவேற, இதைவிட்டால் வேறு வழி ஒன்றும் எனக்குத் தெரியவில்லை!"'
"'கனவா? நீ என்ன சொல்கிறாய்?"'
""ஆமாடி! அவனை கொஞ்ச நாளைக்கு முன் ஒரு கிரிகட் விளையாட்டிலே பார்த்தேன். ரொம்ப நல்லாய் விளையாடினான். என்னை பார்த்துச் சிரித்தான். என்னை அறியாமலே அவனிடம் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. நான் அவனை விரும்புறேன்டி!""
"நீ அவனை விரும்பிறியா? அவனைப் பார்த்தா இன்னோசன்டா இருக்கானே! அவன் என்ன சொல்றான்?
""தெரியாது!""
""தெரியாதா? நீ அவனோட இன்னமும் பேசலையா?""
""இல்லை!""
''அப்போ ஒரு தலைக்காதலா?""
""ஆமா! ஆனால் எப்படியாவது தூண்டில் போட்டு அவனை மாட்டிடுவேன் என்ற நம்பிக்கை எனக்கிருக்கு!"'
"'நீ என்ன சொல்லுறாய்சாரு, எனக்கு ஒன்றுமே புரியலை?"'
''குடியிருக்க வரப்போவதாகச் சொல்லப் போகிறேன். என்னாலே அவனை என் பக்கம் திருப்ப முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு!""
""அப்போ அவனது இதயத்திலும் குடியிருக்கப் போகிறாய், அப்படித்தானே? ஆல்த பெஸ்ட்!"" தோழியை வாழ்த்தினாள் நிருஜா.
அமசடக்காய் இருந்து கொண்டு இவள் எவ்வளவு பெரிய காரியத்தைச் சாதிக்க நினைக்கிறாள் எள்று நினைத்துக் கொண்டாள் நிருஜா.
Comments
Post a Comment