2021 Review Contest - 2nd Prize Winner
(குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய சிறுகதை, நாவல் திறனாய்வுப் போட்டி – 2021 இல் 14 நாடுகளில் இருந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பல திறனாய்வுக் கட்டுரைகளில் இருந்து தெரிவாகி இரண்டாவது பரிசு பெற்ற திறனாய்வுக்கட்டுரை.) பகுப்புமுறைத் திறனாய்வு அடிப்படையில் குரு அரவிந்தனின் சிறுகதைகள் - ஒரு விமர்சன நோக்கு சிவனேஸ் ரஞ்சிதா, கெக்கிராவ, இலங்கை. அறிமுகம் – ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் வரிசையில் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களுக்கும் கணிசமான பங்களிப்பு உள்ளது. மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்தாலும் தமிழ் இலக்கியப் பரப்பை குறிப்பாக புனைகதைத் துறையை தனது பேனாவால் அலங்கரித்தவர். சிறுகதை, நாவல், ஒலிப்புத்தகங்கள், திரைப்படம், மேடை நாடகம், சிறுவர் இலக்கியம் என பன்முக ஆளுமையுடன் தனக்கென ஒரு அடையாளத்தை தமிழ்பேசும் மக்கள் மத்தியில் நிலைநிறுத்தி வைத்துள்ளார். இவருடைய புனைகதை இலக்கியங்களை தமிழ்த்திறனாய்வுத் துறைக்குள் கொண்டுவந்து பேசவேண்டிய தேவை தமிழ்த்திறனாய்வாளர்களுக்கு உள்ளது. அவ்வகையில் குரு அரவிந்தன் அவர்களினால் படைப்புவெளிக்குள்...