மூன்றாவது பெண்..! குரு அரவிந்தன் - Kuru Aravinthan அந்தச் சிறுமி சட்டென்று எனது கவனத்தைத் தன் பக்கம் திருப்பினாள், காரணம் அவளது அந்தக் குரலில் பாசம் இழையோடியிருந்தது. மூத்த மகளாக இருக்க வேண்டும் மற்றப் பிள்ளைகளைவிடச் சற்றுப் பெரியவளாகத் தெரிந்தாள். பத்து வயதிருக்கலாம். ‘டாட் எனக்கு ஒரு ஸ்சுமூதி’ என்று இங்கிருந்தே குரல் கொடுத்தாள். அந்தச் சிறுமியின் குரலில் இருந்த கவர்ச்சி போலவே அவளிலும் அப்படி ஒரு கவர்ச்சி இருந்தது. நன்றாக உடை அணிந்து அழகாக, சிரித்த முகத்தோடு, அமைதியாக இருந்தாள். அந்தக் குடும்பத்தினர் எனக்கு அருகே இருந்த மேசையில் தான் சுற்றிவர அமர்ந்திருந்தார்கள். தாய் தகப்பன் மூன்று பிள்ளைகள். தகப்பன் பிள்ளைகளிடம் ‘என்ன சாப்பிடப் போறீங்க..?’ என்று அவர்களது விருப்பத்தைக் கேட்டார். நியோன் விளக்கு வெளிச்சத்தோடு இருந்த பதாகையில் உணவு வகைகளின் பெயர்களும், அதற்கான படங்களும், விலைப்பட்டியலும் மின்னிக் கொண்டிருந்தன. அவர்கள் அதை உன்னிப்பாகப் பார்த்து ஆளுக்கொரு உணவைக் குறிப்பிட, தகப்பன் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தார். யாருக்கு என்ன தேவை என்பது எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டபின், மனைவ...
எழுத்தாளர் குரு அரவிந்தனின் கதைகளை திறனாய்வு செய்ய விரும்புபவர்கள் வெவ்வேறு கருப்பொருட்களைக் கொண்ட கதைகளை எடுத்தும் திறனாய்வு செயய்யலாம். விரும்பினால் பின் வரும் முக்கிய தலைப்புகளில் அவற்றை அணுகலாம். 1. சமூக, குடும்பக் கதைகள். 2. சங்க இலக்கியம் சார்ந்த கதைகள். 3. போர்க்காலச் சூழல் கதைகள். 4. காதல் கதைகள். 5. கொரோனா காலக் கதைகள். 6. பெண்ணியம் சார்ந்த கதைகள். 7. அறிவியல் கதைகள். 8. வெளிநாட்டுக் கதைகள் உங்கள் எழுத்தாற்றலைக் காட்டுங்கள். முடிவு திகதி 31-3-2025 பின் வரும் இணையத்திலும் குரு அரவிந்தனின் சிறுகதைகளை வாசிக்கலாம். மின்னஞ்சல்: kurufanclub@gmail.com இணையம்: https://kurunovelstory.blogspot.com/ http://tamilaram.blogspot.com/ https://canadiantamilsliterature.blogspot.com/ https://www.sirukathaigal.com/tag/%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d/
இரவில் தெரியும் சூரியன் குரு அரவிந்தன் ‘இந்த விடுமுறைக்கு அலஸ்கா போவோமா?’ என்று வீட்டுக்குள் அடைந்து கிடைந்த மனைவி கேட்ட போது நான் அதைப் பெரிதாக எடுக்கவில்லை. கோவிட் - 19 முடக்கமும் அதற்கு ஒரு காரணமாக இருந்தது. கண்டபடி வெளியே திரிவதைத் தவிர்த்திருந்தோம். ஆனாலும் இரண்டு தடுப்பூசிகளும் போட்டுக் கொண்ட தைரியத்தில், ‘போனால் என்ன’ என்று உள்மனசு தவித்தது. மூடியிருந்த அமெரிக்க – கனடிய எல்லை திறந்ததால் கனடியர்கள் அமெரிக்காவுக்குச் செல்லலாம் என்ற அறிவிப்பும் அப்போதுதான் வந்தது. அமெரிக்காவின் மிகப்பெரிய மாகாணம் அலஸ்காதான் என்பதால் அதைப்பற்றி அறிந்து கொள்ளக் கணனியில் தேடிப்பார்த்தேன். கனடாவின் வடமேற்குப் பகுதியில்தான் அலாஸ்கா இருந்தது. இன்னுமொரு விடயம் எனது கவனத்தைக் கவர்ந்தது. அது என்னவென்றால் இப்போது ஒரு ஆடம்பரமான வீட்டை வாங்கக்கூடியளவு பணத்தைவிடக் குறைவான விலையில்தான் அந்தப்பெரிய நிலப்பரப்பை 7.2 மில்லியன் டொலர்கள் மட்டுமே கொடுத்து ரஸ்யாவிடம் இருந்து அமெரிக்கா அன்று வாங்கியிருந்தது. இன்னும் சில காரணங்களுக்காக, அதாவது பனிப்பாறைகள் சூழ்ந்த வடதுருவம், இரவில் தெரியும் சூரி...
Comments
Post a Comment