Happy Mother's Day
அம்மா
குரு அரவிந்தன்
காலை
நேரம் மெல்ல அணைத்து
என்னை
எழுப்பும் அம்மா
சாலை
ஓரம் ஒதுங்கி நின்று
பள்ளி
அனுப்பும் அம்மா!
படிக்கும்
போது பக்குவமாய்ச்
சொல்லிக்
கொடுக்கும் அம்மா
உண்ணும்
உணவை ஆசையோடு
ஊட்டிவிடும்
அம்மா!
தவறு
செய்தால் கனிவுடனே
திருத்திவிடும்
அம்மா
இரவு
வேளை கதைகள் சொல்லி
உறங்க
வைக்கும் அம்மா!
Comments
Post a Comment