எழுத்தாளர் குரு அரவிந்தனின் 'மாருதப்புரவீகவல்லி' வரலாற்று நாவல் வீரகேசரி 6-7-2025 இதழில் தொடங்குகின்றது. ஞாயிறு வீரகேசரி மின் இதழில் தொடர்ந்து வாசிக்கலாம்.
காங்கேசந்துறை மாலினி அரவிந்தன். நான் யாழ்ப்பாணம், சுண்டுக்குளியில் பிறந்தாலும் நான் புகுந்த, கணவரின் ஊரான காங்கேசந்துறை பற்றி எழுதுகின்றேன். இது இலங்கையின் வடக்கே உள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில் வலிகாமம் வடக்கில் உள்ள ஒரு துறைமுக நகரமாகும். ஆறு வட்டாரங்களைக் கொண்ட இந்த நகரம் வடக்கே பாக்குநீரிணை, கிழக்கே பலாலி விமான நிலையம், தெற்கே மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில், மேற்கே கீரிமலை நகுலேஸ்வரர் கோயில் போன்ற புகழ்பெற்ற இடங்களை எல்லையாகக் கொண்டது. இலங்கையின் காங்கேசந்துறை நகரம் விமான, கப்பல், தொடர்வண்டி, பேருந்துப் போக்குவரத்தின் முக்கிய மையமாக விளங்குகின்றது. வடக்குத் தெற்காக யாழ்ப்பாணம்- காங்சேந்துறை வீதியையும் கிழக்கு மேற்காகக் கீரிமலை - பருத்துறை வீதிகளையும் கொண்டது. தலைநகர் கொழும்பு வரையிலான 256 மைல் கொண்ட தொடர்வண்டிப்பாதைச் சேவை இங்கிருந்துதான் ஆரம்பமாகிறது. காங்கேசந்துறையின் வடக்கே உள்;ள இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு 45 நிமிடத்தில் படகில் செல்லக்கூடியதாக இருக்கின்றது. காங்கேசந்துறைப் பகுதியில் புராதன கோயில்கள் அதிகமாக இருந்ததால், இந்த நகரத்தைச் சங்ககாலத்தில்; ‘கோயிற்கடவை’ என்றும், இங்...
இரவில் தெரியும் சூரியன் குரு அரவிந்தன் ‘இந்த விடுமுறைக்கு அலஸ்கா போவோமா?’ என்று வீட்டுக்குள் அடைந்து கிடைந்த மனைவி கேட்ட போது நான் அதைப் பெரிதாக எடுக்கவில்லை. கோவிட் - 19 முடக்கமும் அதற்கு ஒரு காரணமாக இருந்தது. கண்டபடி வெளியே திரிவதைத் தவிர்த்திருந்தோம். ஆனாலும் இரண்டு தடுப்பூசிகளும் போட்டுக் கொண்ட தைரியத்தில், ‘போனால் என்ன’ என்று உள்மனசு தவித்தது. மூடியிருந்த அமெரிக்க – கனடிய எல்லை திறந்ததால் கனடியர்கள் அமெரிக்காவுக்குச் செல்லலாம் என்ற அறிவிப்பும் அப்போதுதான் வந்தது. அமெரிக்காவின் மிகப்பெரிய மாகாணம் அலஸ்காதான் என்பதால் அதைப்பற்றி அறிந்து கொள்ளக் கணனியில் தேடிப்பார்த்தேன். கனடாவின் வடமேற்குப் பகுதியில்தான் அலாஸ்கா இருந்தது. இன்னுமொரு விடயம் எனது கவனத்தைக் கவர்ந்தது. அது என்னவென்றால் இப்போது ஒரு ஆடம்பரமான வீட்டை வாங்கக்கூடியளவு பணத்தைவிடக் குறைவான விலையில்தான் அந்தப்பெரிய நிலப்பரப்பை 7.2 மில்லியன் டொலர்கள் மட்டுமே கொடுத்து ரஸ்யாவிடம் இருந்து அமெரிக்கா அன்று வாங்கியிருந்தது. இன்னும் சில காரணங்களுக்காக, அதாவது பனிப்பாறைகள் சூழ்ந்த வடதுருவம், இரவில் தெரியும் சூரி...
Comments
Post a Comment