SOPCA 17th Annual Program - 2026
சொப்கா
குடும்ப மன்றத்தின் 17வது
ஆண்டு விழா – 2026
சுலோச்சனா
அருண்
கனடா,
ஒன்ராரியோவில் உள்ள பீல்
பிரதேசத்தில் கடந்த 17
வருடங்களாகச் செயற்பட்டுவரும் தமிழ் மக்களின் குடும்ப மன்றமான சொப்கா (SOPCA) குடும்ப மன்றத்தின் 17வது ஆண்டு நிறைவு கலை விழா
ஜோன் போலிஸ் ஒன்றுகூடல் மண்டபத்தில் சென்ற சனிக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு ஒன்ராறியோ கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பின் நிறுவுனரும்,
ஆசிரியருமான திருமதி கமலவதனா
சுந்தா அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். சிறப்பு
விருந்தினராக 7
ஆம் வட்டார கவுன்சிலரும், மேயர்
பதவிக்குப் போட்டியிடுபவருமான தீபிகா தமெர்லா அவர்கள் கலந்து கொண்டு
உரையாற்றினார்.
மங்கள
விளக்கேற்றியபின் தமிழ்த்தாய் வாழ்த்து, கனடிய தேசியப்பண் ஆகியவற்றைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்
பெற்றது. தொடர்ந்து வரவேற்பு உரையும், வரவேற்பு நடனமும் இடம் பெற்றன. தொடர்ந்து இளைய
தலைமுறையினரின் கண்ணன், ராதா
நடனம், சிறுவர்களின் நடனம்,
மயில் நடனம், நாட்டிய நடனம், உயர் வகுப்பு மாணவர்களின்
நடனம் போன்ற நடன நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. ‘எது சிறந்த தொழில்,’ ‘இருக்கும் போதே கவனி’ போன்ற
சமூக நாடகங்களும் இடம் பெற்றன.
கல்வி
மேற்படிப்புக்கான உதவித்திட்டப் பரிசுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இந்தப்
பரிசுகளை அபர்ணா உதயகுமார், கிரித்திகா
சாந்தகுமார், கயூரி
வேல்நாதன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அடுத்து மன்றத்தின் முதியோர்
கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து நந்தா உணவகத்தின் சேவையைப் பாராட்டி விருது கொடுத்து
அவர்கள் கௌரவிக்ப்பட்டனர். அடுத்து வீணை இசை இடம் பெற்றது. தொடர்ந்து செல்வி அபிசா,
பிரவீன், சபரீசன், செல்வி திரிஸா, செல்வி கேதாயினி ஆகியோரது பாடல்கள் இடம் பெற்றன.
தலைவர்
திருமதி யாழினி விஜயகுரின் உரையைத் தொடர்ந்து, செல்வி ஜெனிசா ராசேந்திரபிரசாத், திரு. ஈசா பரா ஈசானந்தா,
பேராசிரியர் திரு. கிருபராஜன்
தியாகலிங்கம், முன்னாள்
தலைவரும் எழுத்தாளருமான குரு அரவிந்தன், ஆகியேரது உரைகள் இடம் பெற்றன. தலைவர் யாழினி விஜயகுமார்
மற்றும் முன்னாள் தலைவரும் எழுத்தாளருமான குரு அரவிந்தன் ஆகியோர் செப்கா
மன்றத்தின் கடந்தகால வளர்ச்சி பற்றியும், இரத்தவங்கி, உணவு
வங்கி போன்றவற்றுக்கு உதவிகள் செய்வது பற்றியும், இளையோருக்கான கல்வித்திட்டம், தன்னார்வத் தொண்டர்களுக்கான பயிற்சி, தன்னார்வத் தொண்டர்களாகப்
பூங்காக்கள் துப்புரவு செய்வது பற்றியும், இனி வருங்காலங்களில் இளையோரின் எங்கள் சமூகத்திற்கான
பொறுப்புகள் என்ன என்பது பற்றியும் தமது உரையில் குறிப்பிட்டனர்.
திருமதி
குலரஜனி குலசேகரத்தின் பிரதம விருந்தினர் அறிமுகத்தைத் தொடர்ந்து பிரதம
விருந்தினர் திருமதி கமலவதனா சுந்தா அவர்களின் உரை இடம் பெற்றது. அவர் தனது
உரையில் இளைய தலைமுறையினருக்கு இந்த மண்ணில் சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது
என்பதையும், அதை
நேரம் கிடைக்கும் போது கவனமாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதையும்
வலியுறுத்தித் தனது உரையையாற்றினார். தொடந்து மன்றத்தின் செயலாளர் செல்வி
தக்சாயினியின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவுற்றது.
இந்த
நிகழ்ச்சியை கவீனா வேல்நாதன், கிருத்திகா
மோகன், அபிசேக் பிரபாகரன்
ஆகியோர் சிறப்பாகக் கொண்டு நடத்தினர். இச் சந்தர்ப்பத்தில் புலம்பெயர்ந்த மண்ணில்
எமது மொழி, பண்பாடு,
கலாச்சாரத்தைக் காப்பதில்
முன்னின்று பணியாற்றும் இது போன்ற மன்றங்களை வாழ்த்திப் பாராட்டுகின்றோம்.





Comments
Post a Comment