Pathivukal- மாணவர்களுக்கு கற்றல் உபகரணம்

நிகழ்வுகள்
நடேஸ்வராக்கல்லூரி மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கப்பட்டது! - குரு
அரவிந்தன் -
- குரு அரவிந்தன் -
21 பிப்ரவரி 2025

காங்கேசந்துறை
நடேஸ்வராக் கல்லூரி கனிஸ்ட பாடசாலை மாணவர்களுக்கு முன்னாள் நடேஸ்வராக்
கனிஸ்டபாடசாலை அதிபராகவும், காங்கேசந்துறை பட்டினசபைத் தலைவராகவும் பணியாற்றிய
அமரர் திரு. அ. குருநாதபிள்ளை அவர்களின் நினைவாக அதிபரின் குடும்பத்தினரும், எழுத்தாளர் குரு அரவிந்தன் வாசகர் வட்டத்தினரும், இணைந்து கற்றல் உபகரணங்களை வழங்கியிருந்தனர். அதிபரின்
குடும்ப அங்கத்தவரும் பேரனுமான திரு. அருள் சிவகணநாதன் நேரடியாகச் சென்று இந்தக்
கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
போர்ச் சூழல் காரணமாக காங்கேசந்துறைப் பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டதால் மக்கள்
அங்கிருந்து இடம் பெயர்ந்திருந்தனர். அதனால் பாடசாலையும் பல இடங்களுக்கு இடம்
பெயர்ந்து தற்போது மீண்டும் பழைய இடமான காங்கேசந்துறை கல்லூரி வீதியில் இயங்கத்
தொடங்கியிருக்கின்றது. கல்லூரியின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கத்தோடு போதிய
வசதியற்ற குடும்பங்களின் பிள்ளைகளுக்கு இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன.
தற்போதைய கனிஸ்ட
பாடசாலை அதிபர் திருமதி. வி. சுதர்சன் அவர்களின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்
பெற்றது. அப்போது 88 மாணவர்களுக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் அடங்கிய
சுமார் 100 பொதிகள் வழங்கப்பட்டன. சென்ற வருடமும் இது போன்று
உபகரணங்கள் வழங்கப்பட்டன. நடேஸ்வராக்கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கத்தின் ஆதரவுடன்
இந்த நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது.
இதைவிட சிறுவர்களுக்கான சிறுவர் பாடல்கள் அடங்கிய குரு அரவிந்தனின் தமிழாரம் சிறுவர் பாடல் நூல்களும், நடேஸ்வராக்கல்லூரி, மகாஜனக் கல்லூரி ஆகியவற்றின் கனிஸ்ட பாடசாலை மாணவர்களுக்கும், தமிழ்நாட்டில் சில பாடசாலைகளுக்கும் பிரணவன் சிவகணநாதனால் வழங்கப்பட்டது. புலம் பெயர்ந்த மண்ணில் இந்தச் சிறுவர் பாடல்கள் மிகவும் பிரபல்யமாக இருக்கின்றன. இதன் மூலம் சிறுவர்கள் இலகுவாகப் பல தமிழ்ச் சொற்களை உள்வாங்கக் கூடியதாக இருக்கின்றது.
The family of the late Principal and writer, Kuru
Aravindan, in collaboration with the Readers' Circle, jointly donated learning
materials to the students of Kankesanthurai Nadeswara College Kanistha School
in memory of Mr. A. Kurunathapillai. Mr. Kurunathapillai had served as the
former Principal of Nadeswara College Kanistha School and the Chairman of the
Kankesanthurai Town Council. Mr. Arul Sivagananathan, a family member and
grandson of the late Principal, personally attended the event to distribute
these educational materials.
Due to the war, the Kankesanthurai area was declared a
high-security zone, forcing residents to relocate. Consequently, the school was
also displaced multiple times before resuming operations at its original
location on Kankesanthurai College Road. To support and enhance the quality of
education at the school, these learning materials were provided to students
from underprivileged families.
The event was held under the chairmanship of the current
Principal of Kankesanthurai Kanistha School, Mrs. V. Sudarsan. Approximately
100 educational kits containing essential school supplies were distributed to
88 students. A similar initiative was undertaken last year as well. The event
was well attended and received strong support from the Nadeswara College Canada
Old Students' Association.


Comments
Post a Comment