Tamil Aaram - Solar Family - 2026
இங்கே கூடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். எனது பெயர் கவிநயா.
கனடா தமிழ் சிறுவர் இலக்கியத்தின் இன்னும் ஒரு அங்கமாக இன்று ‘கதிரவன் குடும்பம்’ என்ற அறிவியல் சார்ந்த இந்த நூல் வெளிவருவதையிட்டு இளையோராகிய நாங்கள் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.
கடந்த 24 வருடங்களாக வெளிவரும் சிறுவர் மலரான ‘தமிழ் ஆரம்’ இதழின் சிறப்பு மலராக ‘பிரபஞ்சம்’ சார்ந்த இளையோருக்கான இந்த அறிவியல் நூல் வெளிவருகின்றது. நான் வதனம் இதழில் இணையாசிரியராகத் தொடர்ந்து எழுதுவதற்கும் இந்த மேடையில் இன்று நிற்பதற்கும் என்னைப் பயிற்றுவித்த கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பின் நிறுவுனர் திருமதி கமலவதனா சுந்தா அவர்களும் வதனம் முதன்மை ஆசிரியர் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களும் முக்கிய காரணமாக இருப்பதையிட்டு நான் பெருமை அடைகின்றேன்.
இனி வரும் காலங்களில் அறிவியல் சார்ந்த விண்வெளித் தேடல்களே முக்கிய இடம் பெறப் போவதால் தமிழ் சிறுவர்களும், இளையோரும் அதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற பெரு விருப்பின் காரணமாக எழுத்தாளரும், வதனம் இதழின் முதன்மை ஆசிரியருமான குரு அரவிந்தன் அவர்கள் இந்த நூலைத் தொகுத்து அளித்திருக்கின்றார்.
புலம்பெயர்ந்த மண்ணில் ஏன் தமிழ் சிறுவர் இலக்கியம் முக்கியம் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். கனடிய இலக்கியத்திற்கு இது போன்ற நூல்கள் அணி சேர்ப்பது மட்டுமல்ல, எங்கள் தமிழ் மொழி இந்த மண்ணில் தொடர்ந்து நிலைத்து நிற்க இது போன்ற நூல்களே இன்றைய சூழ்நிலையில் எமக்குத் தேவைப்படுகின்றன. இதுமட்டுமல்லஇ கனடா தமிழ் சிறுவர் இலக்கியத்தின் முன்னோடியான எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் ‘தமிழ் ஆரம் சிறுவர் பாடல்கள்’ என்ற சிறுவர் பாடல்கள் அடங்கிய ஒரு நூலும் இன்று வண்ண மலராக வெளிவர இருப்பது எமக்குப் பெருமைக்குரியது.
கதிரவன் குடும்பம் என்ற இந்த நூல் இளையோருக்கான மொழியில் பிரபஞ்சம் என்றால் என்ன? சூரியக்குடும்பம்இ குள்ளக் கோள்கள்இ நட்சத்திரங்கள், சந்திரன்இ வால்வெள்ளிகள்இ விண்கற்கள் போன்ற பல விடயங்களைச் சுருக்கமாகத் தமிழிலும் ஆங்கில மொழியிலும் எடுத்துச் சொல்கின்றது. இளையோர் மட்டுமல்ல அறிவியலில் ஆர்வமுள்ள அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூலாக இது இருக்கின்றது. கனடாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன் தொகுத்த இந்த நூல் இங்கே கிடைக்கிறது, நீங்களும் பெற்றுக் கொள்ளலாம். நன்றி.
இளைய தலைமுறையினருக்காக நான் ஆங்கிலத்திலும் இந்த நூல்பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடுகின்றேன்.
Good evening, everyone.
My Name is Kavinaya. I would like to briefly speak in English for the younger generation.
We, the youth, are very happy that the book Solar System is being released today as another valuable contribution to Canadian Tamil children’s literature. This science book about the universe is being published as a special edition of the children’s magazine Tamil Aaram, which has been serving young readers for the past 24 years.
I am proud to mention Mrs. Kamalavathana Sunda, the founder of the Kiraamaththu Vathanam Women’s Organization, who encouraged and trained me to continue writing as an associate editor of Vathanam magazine. I am also very grateful to writer Mr. Kuru Aravinthan, the editor-in-charge of Vathanam magazine, who is one of the main reasons I can stand on this platform today.
As scientific knowledge and space exploration will play an important role in the future, writer and chief editor Mr. Kuru Aravinthan has compiled this book with the great desire that Tamil children should learn about the solar system and the universe in their own language.
We must understand why Tamil children’s literature is important in the diaspora. Books like this not only enrich Canadian literature but also help our Tamil language continue to live and grow in this land. It is also a matter of pride that another colorful magazine, containing children’s Tamil songs by Kuru Aravinthan, a pioneer of Canadian Tamil children’s literature, is also being released today.
The book Solar System explains the universe in a simple way that young readers can understand. It introduces many topics such as the solar family, Universe, dwarf planets, stars, the moon, comets, and meteors.
This is a book that should be read not only by children, but by everyone who is interested in science. This book, compiled by author Mr. Kuru Aravinthan, who received the Lifetime Achievement Award, is available here, and you too can get it.
Thank you.


Comments
Post a Comment